தீபாவளி பண்டிக காலப்பகுதியில் ஹட்டன் டிப்போவுக்கு ஒரு கோடியே 10 லட்சம் ரூபா வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது என்று டிப்போ முகாமையாளர் தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகைக்காக கொழும்பு உட்பட வெளி மாவட்டங்களில் இருந்து பெரும் எண்ணிக்கையிலான பொது மக்கள் ஹட்டனை நோக்கி வருகை தந்திருந்தனர். இதனால் விசேட பஸ் சேவைகள் ஹட்டனிலிருந்து மலையக நகரங்களுக்கும் தலைநகரத்திற்கும் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
இந் நிலையில் கடந்த 27 ஆம் திகதி தொடக்க 31 திகதி வரை குறிப்பிட்ட வருமனத்தினை ஈட்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். எனினும் கடந்த கால தீபாவளியினை ஒப்பிடும் போது இம் முறை வருமானம் குறைந்துள்ளதாகவும் அதற்கு கொழும்பிலிருந்து ஏனைய காலங்களில் வந்த அளவுக்கு இம்முறை வருகை தரவில்லை என்றும் பஸ் கட்டணம் குறைக்கப்பட்டமையும் காரணம் எனவும் முகாமையாளர் சுட்டிக்காட்டினார்.