துப்பாக்கி, தோட்டாக்களுடன் பயணி ஒருவர் கட்டுநாயக்கவில் கைது !

துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பயணி துருக்கியின் – இஸ்தான்புல் நோக்கி செல்ல முற்பட்ட போதே, கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரது பயண பொதியினை சோதனையிட்ட போது, அதிலிருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர், பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles