தென்னாபிரிக்கா ஜனாதிபதி ரம்போசாவிற்கு கொவிட் தொற்று

தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரம்போசாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ஏற்கெனவே இரு தடுப்பூசிகள் செலுத்தியிருப்பதால், இலேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்க ஜனாதிபதி அலுவலகத்துக்கான அமைச்சர் மாண்டில் குங்குபெலே வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதி சிரில் ரம்போசாவுக்கு இலேசான உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. ஏற்கனவே ஜனாதிபதி இரு தடுப்பூசிகள் செலுத்தியிருப்பதால், இலேசான அறிகுறிகள் மட்டுமே காணப்படுகின்றன.

Related Articles

Latest Articles