ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், பங்காளிக்கட்சி தலைவர்களுக்குமிடையிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று (11) கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.
இதன்போது ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைக்கப்பெற்ற தேசியப்பட்டியல் ஆசனங்களை பங்கிடுவது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. எனினும், இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
இதனையடுத்து தேசியப்பட்டியல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தேசியப்பட்டியல் தொடர்பில் முடிவெடுப்பதற்காக சஜித் பிரேமதாசவுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி இன்றுவரை காலக்கெடு விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.