தேசியப் பட்டியல் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது எனவும், அது தொடர்பான பெயர் விபரங்களை கட்சி தலைவர் விரைவில் வெளியிடுவார் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைக்கப்பெற்ற ஐந்து தேசியப் பட்டியல் ஆசனங்களில் நான்கு ஆசனங்களுக்குரிய உறுப்பினர்களின் பெயர்கள் இன்னும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்படவில்லை.
தேசியப் பட்டியல் வாய்ப்பை தோல்வி அடைந்த உறுப்பினர்களும், பங்காளிக்கட்சி உறுப்பினர்களும் கோருவதால் ஐக்கிய மக்கள் கூட்டணிக்குள் கடும் நெருக்கடி ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் இப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டுவிட்டதா என எழுப்பட்ட கேள்விக்கே,
‘ பிரச்சினை தீர்ந்துவிட்டது, பெயர் விபரத்தை மட்டுமே அறிவிக்க வேண்டியுள்ளது. அதனை கட்சி தலைவர் அறிவிப்பார்.” எனவும் அஜித் பி பெரேரா குறிப்பிட்டார்.
அதேவேளை உள்ளாட்சிசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு சாதகமான பெறுபேறு கிட்டும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
