தேசிய அரசமைப்பது தொடர்பான யோசனையை அரசு முன்வைக்கும் பட்சத்தில், அதற்கு அனைத்து கட்சிகளும் இணக்கம் தெரிவிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
” தேசிய அரசு தொடர்பான யோசனையை 2007 ஆம் ஆண்டு நான் முன்வைத்தபோது அதனை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்த்தது. இதனையடுத்து நாம் அரசுடன் இணைந்தோம். நாட்டை மீட்டோம்.
அன்று போலவே இன்றும் நெருக்கடி உள்ளது. எனவே, நாட்டை மீட்க கட்சிபேதம் பாராது, அனைவரும் ஒன்றுபட வேண்டும்.” எனவும் ராஜித குறிப்பிட்டார்.










