தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வருகிறார் கோட்டா! பதவி துறக்கிறார் சீதா!!

இம்மாத இறுதியில் நாடு திரும்புள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளார் என அறியமுடிகின்றது.

கோட்டாபய ராஜபக்சவின் பாதுகாப்புக்காகவும், வெளிநாட்டு பயணங்களுக்கு தேவையான இராஜதந்திர அந்தஸ்தைப் பெறுவதற்காகவும் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதற்காக, வியத்மக அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் கலாநிதி சீதா அரம்பேபொல தேசியப் பட்டியலில் இருந்து விலகவுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களாக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

இந்நிலையில் கோட்டாபய ராஜபக்சவும் நாடாளுமன்றம் வந்தால், சபையில் உள்ள முன்னாள் ஜனாதிபதிகளின் எண்ணிக்கை 3 ஆக உயரும்.

Related Articles

Latest Articles