இலங்கையில் மக்கள் ஆணையுடன் ஆட்சிக்குவரும் அரசுடன் இணைந்து செயற்பட தயார் என்ற உறுதிமொழியை இந்தியா வழங்கியுள்ளது – என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார் .
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியை ஏற்படுத்துவதற்கு இந்தியாவின் ஆதரவு என்பது பற்றி எதுவும் பேசப்படவில்லை. நாமும் இது பற்றி கோரிக்கை எதையும் விடுக்கவும் இல்லை. ஆனால் இலங்கையில் மக்கள் ஆணையுடன் ஆட்சிக்குவரும் அரசுடன் செயற்பட தயார் என இந்திய தரப்பில் கூறப்பட்டது.
அத்துடன், தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவது தொடர்பில் பேச்சு நடத்தினோம். இதற்கு நாம் உடன்படவில்லை என்பது பற்றியும் கூறினோம். ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க முடியாது, அத்தேர்தலில் எமது கட்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்ற தகவலை நாம் வழங்கினோம்;.கட்சியொன்றை ஆட்சிக்கு கொண்டுவருவது பற்றி பேசப்படவில்லை.” –
என்றார்
