தேர்தலை இலக்குவைத்த பாதீடே இது – எதிரணி சாடல்

2024 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள தேர்தலை இலக்குவைத்தே வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.

2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பொருளாதார நிபுணரான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கூறியவை வருமாறு,

” அடுத்த வருடம் தேர்தல் உறுதியாகியுள்ளது. அத்தேர்தலுக்கு தயாராகும் வகையில் பாதீட்டில் பல உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளன. அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா வாழ்க்கைச்செலவு கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் முதல் அது வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. எனவே ஏப்ரல் மற்றும் ஒக்டோபருக்கு இடையில் தேர்தல் நடைபெறுவது உறுதியாகின்றது.

நாம் பயணிக்க வேண்டிய திசை எது? அத்திசையை நோக்கி செல்ல வேண்டுமெனில் கடும் பொருளாதார மறுசீரமைப்பு அவசியம். அத்திசையை நோக்கி பயணிக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என்பது புலனாகின்றது. ஆனால் இதனை நடைமுறைப்படுத்த முடியுமா என்பதில்தான் பிரச்சினை உள்ளது. வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறு தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.

விமானம் செல்வதுபோல் ஒரு திசையில் செல்ல வேண்டும். ஆனால் ஏதேனும் சிக்கல் எனில் விமானம் கீழே விழுவதற்கான சாத்தியம் அதிகம். கடன் சுமை அதிகரித்துள்ளது. இது பற்றி நாளை (இன்று) முழுமையாக தெளிவுபடுத்துவேன்.

யோசனைகள் சிலவேளை யோசனையாகவே இருக்கக்கூடும்.” – என்றார்.

Related Articles

Latest Articles