தேர்தல் ஆட்டத்தை ஆரம்பித்தது இ.தொ.கா.! வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பம் கோரல்!!

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் இ.தொ.கா. சார்பில் போட்டியிட விருப்பமுடையவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் இ.தொ.காவில் போட்டியிட விருப்பமுடையவர்கள் தமது விண்ணப்பங்களை சுயவிபரங்களை உள்ளடக்கி,

போட்டியிட விரும்பும் உள்ளூராட்சி சபையின் பெயர், உள்ளூராட்சி சபையின் எல்லைக்கு உட்பட்ட போட்டியிட விரும்பும் வட்டாரத்தையும் குறிப்பிட்டு –

எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி முதல் ஜனவரி 10ஆம் திகதிக்கு இடையில் இ.தொ.கா தேர்தல் பிரிவு கணக்காளர், இலக்கம் 72, சௌமியபவான், ஆனந்த குமாரசாமி மாவத்தை, கொழும்பு 07 என்ற முகவரிக்கு பதிவுத் தபால் மூலம் பதிவு செய்யுமாறு இ.தொ.கா அறிவித்துள்ளது.

Related Articles

Latest Articles