தொலஸ்பாகையில் இரு வாகனங்கள் தீக்கிரை!

நாவலப்பிட்டிய, குறுந்துவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொலஸ்பாகை , மீனகொல்ல பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன.

வீடொன்றுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றும், வேன் ஒன்றுமே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளன.

இன்று அதிகாலை மூன்று மணியளவிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

தீ எவ்வாறு ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.
மேலதிக விசாரணைகளை குறுந்துவத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles