தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரபூர்வ இலட்சினையை மாற்றக்கூறும் விடயத்தில், நாடாளுமன்றில் யோசனை ஒன்றைக் கொண்டுவருமாறு, அமைச்சர் மஹிந்த அமரவீர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் M. A. சுமந்திரனிடம் இடம் கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,
தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரபூர்வ இலட்சினையை சபையில், தமது கைபேசித் திரையில் காண்பித்தவாறு கருத்துக்களை வெளிப்படுத்தினார்.
தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரபூர்வ இலட்சினை, தர்மசக்கரத்தையும், தூபியையும் கொண்டுள்ளது.
இது பார்ப்பதற்கு, பௌத்த மத அலுவல்கள் அமைச்சைப் போன்றுள்ளது.
தொல்பொருள் திணைக்களத்தின் இலட்சினையில், எந்த மதம் வெளிப்படுத்தப்படுகிறது?
இந்தத் திணைக்களம் எதனைப் பாதுகாக்கிறது என்பதையும், எதனை அழிக்க நினைக்கிறது என்பதையும் இது காட்டுகிறது. – என்றார்.
இதுதொடர்பில், குறுக்கிட்டு பதிலளித்த அமைச்சர் மஹிந்த அமரவீர,
தொல்பொருள் திணைக்களத்தின் இலட்சினை, இன்று நேற்றல்ல, பல வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்டதாகும்.
எனவே, எந்த மதத்துக்கும் வேறுபாடுகளை காட்ட நாம் இடமளிப்பதில்லை என்று கூறினார்.
சுமந்திரன் – அப்படியாயின், நீங்கள் இந்த இலட்சினையை மாற்றுவதாக எமக்கு வாக்குறுதி தருகின்றீர்களா?
அமரவீர – நாடாளுமன்றில் இது குறித்து யோசனை ஒன்றை கொண்டு வருமாறும், அது நியாயமானதாயின் கலந்துரையாடலாம் என்றும் குறிப்பிட்டார்.
சுமந்திரன் – ஒரு காலத்திற்கு முன்னர் உருவாக்கப்பட்டதால், அது சரியாகாது தானே?
இப்போது நான் காண்பித்திருக்கின்றேன். அதனை இப்போது மாற்றுவீர்களா? இது நியாயமானதா?
நீங்கள் இதனை நியாயமானது என்று கூறுகின்றீர்களா? என்று தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பினார்.
நீங்கள்தானே இதனை முன்வைக்கிறீர்கள். இது குறித்து கலந்துரையாடுவோம். – என்று அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.
பாரதி
