தோட்டத்தில் வேலை செய்யாவிட்டாலும் எவரையும் வெளியேற்ற முடியாது – வடிவேல் சுரேஷ்!

” பெருந்தோட்ட மக்கள் தோட்டத்தில் வேலை செய்தாலும், செய்யாவிட்டாலும் அவர்களை அங்கிருந்து வெளியேற்றும் அதிகாரம் எவருக்கும் கிடையாது.” – என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

அத்துடன், தொழிலாளர்களின் தொழிற்சங்க பிரச்சினைகளை பொலிஸார் கையாள முடியாது. இதற்கும் முற்றுபுள்ளி வைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதியால் தனக்கு வழங்கப்பட்டுள்ள பதவியை, மலையக மக்களின் மேம்பாட்டுக்காக பயன்படுத்துவேன் எனவும் வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles