தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உள்ளிட்ட உரிமைகள் காக்கப்படும்!
ஜே.வி.பியின் பெருந்தோட்டத்துறை தொழிற்சங்கமான அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் சந்திப்பு நேற்று நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கிட்னன் செல்வராஜ், கிருஷ்ணன் கலைச்செல்வி, மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி ஆகியோரின் பங்கேற்புடன் இச்சந்திப்பு நடைபெற்றது.
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் உள்ளாட்சிமன்ற உறுப்பினர்கள், தோட்ட தலைவர் தலைவிமார்கள் , இளைஞர்கள் பொதுமக்கள் பங்கேற்றிருந்தனர்.
தோட்ட தொழிலாளர்களுக்கு தேசிய மக்கள் சக்தி அரசு நிச்சயம் சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்கப்படும் என இதன்போது உறுதியளிக்கப்பட்டது. அத்துடன், தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டது.
கஜரூபன் திவ்யா










