” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த தொகை மேலும் அதிகரிக்கப்பட வேண்டும். இந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம்.” – என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
நாள் சம்பளத்தை மாத சம்பளமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதனை நோக்கி எதிர்காலத்தில் பயணிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.