மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை அரசாங்கம் ஒருபோதும் கைவிடாது. அவர்களுக்கான தொழில் சலுகைகள் உறுதிப்படுத்தப்படும் – என்று தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். வாக்குகளை மையப்படுத்தி நாம் அரசியல் செய்யவில்லை. கொள்கை அடிப்படையிலேயே தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.
கடந்த ஆட்சியின்போது தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. அவர்களுக்கான ஊதிய உரிமை எமது ஆட்சியில்தான் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் நாம் பெருமையடைகின்றோம்.