பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளை பொறுப்பேற்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அத்துடன், பெருந்தோட்டப்பகுதிகளில் சுகாதார துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும். வைத்தியசாலையொன்றுக்கு இரு வைத்தியர்கள் வீதம் வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள சில வைத்தியசாலைகளில் எம்.பி.பி.எஸ். வைத்தியர்கள் இல்லை. ஈ.எம்.ஓக்களே இருக்கின்றனர். இதனால் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன என்று வடிவேல் சுரேஷ் சுட்டிக்காட்டியிருந்தார்.