அவிசாவளை, எலிஸ்டன் தோட்ட பகுதியில் இளைஞர் ஒருவர்மீது தோட்ட கள உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து போராட்டம் இடம்பெற்றுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வைக்காதே வைக்காதே ஆலயத்தின் மீது கால் வைக்காதே! அடிக்காதே அடிக்காதே தொழிலாளர்களை அடிக்காதே! போன்ற கோஷங்கள் எழுப்பட்டன.
அவிசாவளை எலிஸ்டன் தோட்ட மேல் பிரிவு இளைஞர் மீது தோட்ட கள உத்தியோகஸ்தர்களால் தாக்கப்பட்ட இளைஞன் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.