தோட்ட வைத்திய அதிகாரிகள் , தோட்ட குடும்ப நல உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர் பாராமரிப்பு நிலைய உத்தியோகத்தர்கள் ஆகியோகர்களுக்கு, அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று நடைபெற்றது.
கொட்டகலை சிஎல்எப் வளாக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில், நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 600 இற்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் கலந்துக்கொண்டிருந்தனர்.
தாம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பாக அதிகாரிகள், அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.
தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளும் செயற்பாடு போன்று உங்களுடைய சம்பள அதிககரிப்பிற்கும் நான் உறுதுனையாக இருப்பேன்.’’ – என்று இதன்போது அமைச்சர் ஜீவன் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது தோட்டங்களில் உத்தியோகத்தர்களாக கடைமை புரிந்துக்கொண்டிருக்கும் உங்களுக்கும் அமைச்சினூடாக வீடமைப்பு திட்டத்தினையும், காணியினை பெற்றுத்தருவதாகவும், தோட்டதொழிலாளர்களுக்கு போன்றே உங்களுக்கும் காப்புறுதி திட்டத்திதைனையும் விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் விளக்கமளித்தார்.










