சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார்.
அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு புதிய வெப் சீரிஸ் (Web Series) ஒன்றை அவர் இயக்கவுள்ளார்.
‘அமேசான் பிரைம் வீடியோ’ (Amazon Prime Video) தளத்திற்காக உருவாகும் இத்தொடர், ‘மேஜிக் ரியலிசம்’ மற்றும் ‘சூப்பர்நேச்சுரல் த்ரில்லர்’ (Supernatural Thriller) பாணியிலான கதையம்சத்தைக் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்து பேசிய இயக்குநர் நந்தினி ரெட்டி, இத்தொடரின் திரைக்கதையை அமைப்பதற்குத் தாம் சுமார் ஒன்றரை ஆண்டுகள் எடுத்துக்கொண்டதாகவும், இதன் படப்பிடிப்பு பணிகள் வரும் நவம்பர் மாதம் தொடங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே ‘பிரிந்தா’ தொடரின் மூலம் ஓடிடி (OTT) தளத்தில் தடம் பதித்த த்ரிஷா, தற்போது இந்த வித்தியாசமான கதையம்சம் கொண்ட தொடரின் மூலம் மீண்டும் டிஜிட்டல் தளத்தில் கலக்கவுள்ளார்.










