‘நம்பிக்கையில்லாப் பிரேரணை 19 ஆம் திகதி கையளிப்பு’

” அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிச்சயம் நிறைவேற்றிக்கொள்ள முடியும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும், தற்போதைய அரசு வீடு செல்ல வேண்டும் என்பதே நாட்டு மக்களின் நிலைப்பாடாகும்.

எனவே, மக்களின் கோரிக்கைக்கு செவிமடுக்காமல், எவராவது இப்பிரேரணையை எதிர்த்து வாக்களித்தால் அவர்களுக்கு மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள் என்றும் லக்‌ஷ்மன் கிரியல்ல சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கபடும் என ஆளுங்கட்சி தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles