சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது.
அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு இன்னும் அறிவிக்கப்படவில்லை.
சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பம் திரட்டும் நடவடிக்கை நேற்று ஆரம்பமான நிலையில், பிரேரணையில் முதல் கையொப்பத்தை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இட்டார்.
இதன்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தமது கட்சியின் சார்பில் கையொப்பம் இட்டார்.
கையொப்பம் திரட்டும் நடவடிக்கை முடிவடைந்த பின்னர் நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்தவாரம் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.
