இருதய நோய் காரணமாக நேற்று சென்னையில் உள்ள அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முத்தையா முரளிதரன், சிகிச்சைகளின் பின்னர் இன்று வீடு திரும்பியுள்ளார்.
ஐ.பி.எல். தொடரில் சன் ரைசஸ் ஹத்ராபாத் அணியின் சுழற்பந்து பயிற்றுவிப்பாளராக முத்தையா முரளிதரன் செயற்பட்டுவருகின்றார். இதனால் அவர் இந்தியாவில்தான் தற்போது தங்கியுள்ளார்.
இந்நிலையிலேயே அவருக்கு நேற்று திடீரென இருதய நோய் ஏற்பட்டுள்ளது.