நல்லத்தண்ணி நகரில் காட்டு பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
விருந்தினர் விடுதிகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் ஏனைய இடங்களிலும் பன்றிகளின் சுற்றிதிரிகின்றன. உணவுகளையும், கழிவு பொருட்களை உண்ணவுமே பன்றிகள் இவ்வாறு வருகின்றன.
இவ்வாறு வரும் காட்டு பன்றிகள், சில நேரங்களில் விருந்தினர் விடுதி , வர்த்தக நிலையங்கள் , குடியிருப்பு களுக்கு உள்ளே சென்று அங்கு உள்ள உணவு பொருட்களை உண்ணும் நிலையில் உள்ளது என அப் பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
எதிர் வரும் காலங்களில் சிவனடி பாதமலை பருவகாலம் ஆரம்பித்தவுடன் இங்கு யாத்திரிகர்கள் வருகை ஆரம்பித்தால் மேலும் பன்றிகள் நடமாட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இதனால் மக்களுக்கு தீங்கு ஏற்படும் அபாயமும் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன்
கவணம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் நகர் மக்கள்.
மஸ்கெலியா நிருபர் -செதி பெருமாள்