நவம்பர் 10 ஐ.பி.எல். இறுதிப்போட்டி! வெற்றிவாகை சூடப்போகும் அணி எது?

கொரோனா அச்சத்தால் இம்முறை ஐ.பி.எல். தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. அபுதாபி, துபாய்,ஷார்ஜா ஆகிய 3 நகரங்களில் நடந்து வருகிறது. ஐபிஎல் தொடரில் ஏறக்குறைய லீக் ஆட்டங்கள் முடியும் நிலையில் இருக்கின்றன.

ஐபிஎல் தொடர் தொடங்கியபோது, லீக் சுற்றுகளின் திகதிகள், இடங்களை மட்டுமே அறிவித்திருந்த ஐபிஎல் நிர்வாகம், பிளே ஆப் சுற்றுக்கான திகதி , இடங்களை அறிவிக்கவில்லை. இந்நிலையில் பிசிசிஐ நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடக்கும் இடங்கள்,திகதிகளை அறிவித்துள்ளது.

பிளே ஆஃப் சுற்றில் முதல் தகுதிச் சுற்று ஆட்டம் நவம்பர் 5ஆம் திகதி துபாயில் நடைபெறுகிறது. இதில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் இரு இடங்களைப் பெற்ற அணிகள் மோதும். எலிமினேட்டர் ஆட்டம் நவம்பர் 6-ம் திகதி அபுதாபியில் நடக்கிறது. இதில் 3-வதுமற்றும் 4-வது இடம் பெற்ற அணிகள் மோதுகின்றன.

நவம்பர் 8-ம் திகதி அபுதாபியில் நடக்கும் 2-வது தகுதிச்சுற்றுஆட்டத்தில் முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் தோற்ற அணியும், எலிமினேட்டர் சுற்றில் வென்ற அணியும் மோதுகின்றன.

நவம்பர் 10 ஆம் தேதி துபாயில் இறுதிப்போட்டி நடக்கிறது. இதில் முதல் தகுதிச்சுற்றில் வென்ற அணியும், 2-வது தகுதிச்சுற்றில் வென்ற அணியும் மோதுகின்றன. போட்டிகள் அனைத்தும் இலங்க நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகின்றன.

Related Articles

Latest Articles