ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 24 ஆம் திகதி விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார் எனவும் அன்றைய தினம் தெற்கு அரசியலில் அரசியல் பூகம்பம் ஏற்படவுள்ளதெனவும் அறியமுடிகின்றது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவித்தலை விடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிட்டியுள்ள நிலையில், செப்டம்பர் 28 அல்லது ஒக்டோபர் 5 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படலாம். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளிவரவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி தமது கட்சி, கூட்டணி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை பெயரிட்டுள்ளது.தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்கவை அறிவித்துள்ளது.
எனினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி தேர்தல் குறித்து தமது கட்சி நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை.
தமது கட்சி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க என ஐக்கிய தேசியக்கட்சி அறிவித்தாலும், ஜனாதிபதி ரணில் அது தொடர்பில் அறிவித்தல் எதையும் விடுக்கவில்லை.
எனவே, 24 ஆம் திகதி உரையின்போதே ஜனாதிபதி தேர்தல் குறித்தான தமது முடிவை ஜனாதிபதி அறிவிக்கவுள்ளார் என தெரியவருகின்றது. 24 ஆம் திகதி முடியாமல்போனால் 25 ஆம் திகதி அவரின் உரை அமையக்கூடும்.
ஜனாதிபதியின் உரை முடிந்த பின்னர் அவருக்கு ஆதரவை தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதியுடன் இணைவார்கள் எனவும் தெரியவருகின்றது.
அதேபோல ஆளுங்கட்சியில் உள்ள சிலர் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இணையவுள்ளனர்.
