9ஆவது நாடாளுமன்றத்தின் 4ஆவது கூட்டத்தொடர் ஜனாதிபதியால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் பெப்ரவரி 7 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
அன்றைய தினம் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை இடம்பெறும். ஜனாதிபதியே சம்பிரதாயப்பூர்வமாக சபை நடவடிக்கையை ஆரம்பித்து வைப்பார்.
