நாட்டில் உணவு பஞ்சம் ஏற்படாது – அமைச்சர் உறுதி

“ நாட்டில் உணவுப் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை, எனவே. உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது.” – என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ நாட்டில் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது, மக்களுக்கு பிரச்சினை உள்ளது என்பதை நாம் ஏற்கின்றோம். இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. ஆனால் உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற விடயத்தை ஏற்கமுடியாது. உரிய விளைச்சல் கிடைக்கின்றது. எனவே, அரிசி மற்றும் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது.
ஆனால் நாட்டில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட வேண்டும் என்பதையே எதிரணி விரும்புகின்றது. அதற்கு நாம் இடமளிக்க வேண்டும். இப்பிரச்சினைகள் விரைவில் தீரும்.” – என்றார் மஹிந்தானந்த அளுத்கமகே.

Related Articles

Latest Articles