” எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தையடுத்து நாட்டில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படும் என வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது.” – என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில இன்று தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று நடைபெற்றது.
இதன்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர்,
” எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்ததால் அதன் சிதைவுகள் , இரசாயனம் என்பன கடலுடன் கலந்துள்ளதால் உப்பு உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படும். இதனால் எதிர்காலத்தில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என வதந்தி பரப்பட்டுவருகின்றது. அவ்வாறு எந்தவொரு தட்டுப்பாடும் ஏற்படாது. உப்பு உற்பத்திக்கு எவ்வித தாக்கமும் ஏற்படவில்லை.” – என்றார்.
