நாட்டில் தலைதூக்கிய டெங்கு – அபாயத்திலுள்ள மாவட்டம்

2023ம் ஆண்டின் இதுவரையான காலம் வரை டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்தை எட்டியுள்ளது.

இதன்படி, இந்த ஆண்டின் நேற்றைய தினம் (19) வரை 73,032 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வு பிரிவு தெரிவிக்கின்றது.

டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 15,503 பேர் இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் 34,700 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாகாண ரீதியில் நவம்பர் மாதத்தில் 4,539 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவே மாகாண மட்டத்தில் அதிகளவினான எண்ணிக்கை என தெரிய வருகின்றது.

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலையை அடுத்தே, டெங்கு தொற்று அதிகரித்து வருவதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

டெங்கு தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு சுற்று சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு சுகாதார பிரிவினர் கேட்டுக்கொள்கின்றனர்

Related Articles

Latest Articles