கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 37 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார்.
25 ஆண்களும், 12 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி வைரஸ் தொற்றால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 157 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை, நாட்டில் இன்று மேலும் ஆயிரத்து 102 பேருக்கு இன்று கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
