நாட்டில் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 42 கிராம சேவகர் பிரிவுகள் எதிர்வரும் 17 ஆம் திகதி காலை 4 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்று நிலையை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு முதல் 17 ஆம் திகதி காலை 4 மணிவரை நாடு முழுவதும் பயணத்தடை அமுலில் உள்ளது. எனவே, 17 ஆம் திகதி முதல்தான் தனிமைப்படுத்தல் நடைமுறை அமுலுக்கு வரும்.


