நாட்டில் மேலும் 6 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் மேலும் 6 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி மாத்தறை மாவட்டத்தில் உயன்வத்த, உயன்வத்த வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும், கண்டி மாவட்டத்தில் வலகம்பாய கிராம சேவகர் பிரிவும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், மாத்தளை மாவட்டத்தி உடஹவிட்ட கிராம சேவகர் பிரிவும், புத்தளம் மாவட்டத்தில் மெதகிரியான கிராம சேவகர் பிரிவும் குருணாகல் மாவட்டத்தில் நிகதலுபொத கிராம சேவகர் பிரிவும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles