இலங்கையில் நேற்றைய தினமும் 66 ஆயிரத்து 784 பேருக்கு கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
65 ஆயிரத்து 104 சினோ பாம் தடுப்பூசிகளும், ஆயிரத்து 680 ஸ்புட்டின் – பை தடுப்பூசிகளும் இவ்வாறு மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன், கொவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுக்கொண்டவர்களுள் 193 பேருக்கு 2ஆம் டோஸ் வழங்கப்பட்டது.
இலங்கையில் 2021 ஜனவரி 29 ஆம் திகதி முதல் மே 30 ஆம் திகதிவரை 16 லட்சத்து 8 ஆயிரத்து 518 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இன்றைய தினமும் தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுக்கப்படுகின்றது. தடுப்பூசி பட்டில் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.
இதன்படி கொவிஷீல்ட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 9 லட்சத்து 25 ஆயிரத்து 242 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளது. இவ்வாறு முதலாவது டோஸை பெற்றுக்கொண்டவர்களில் 3 லட்சத்து 45 ஆயிரத்து 789 பேருக்கு இரண்டாம் டோஸ் ஏற்றப்பட்டுள்ளது. சுமார் 5 லட்சத்து 79 ஆயிரத்து 453 பேருக்கு இரண்டாம் டோஸ் ஏற்றவேண்டியுள்ளது.
2021 மார்ச் 26 ஆம் திகதி முதல் மே 30 ஆம் திகதிவரை இலங்கையில் உள்ள 2 ஆயிரத்து 435 சீனப்பிரஜைகள் உட்பட 6 லட்சத்து 66 ஆயிரத்து 612 பேருக்கு சினோ பாம் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இதன் இரண்டாவது டோஸை 2 ஆயிரத்து 435 பேர் பெற்றுள்ளனர்.
ஸ்புட்னிக் – பை தடுப்பூசி ஏற்றும் பணி ஏப்ரல் 30 ஆம் திகதி ஆரம்பமானது. மே 30 வரை 16 ஆயிரத்து 664 பேருக்கு அந்த தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றப்பட்டுள்ளது. இன்னும் இரண்டாவது டோஸ் ஏற்றும் பணி ஆரம்பமாகவில்லை.
அதேவேளை, நுவரெலியா கண்டி, இரத்தினபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பமாகியுள்ள நிலையில், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள், ஆடைத்தொழிற்சலை பணியாளர்களுக்கும் தடுப்பூசி விரைவில் ஏற்றப்படவேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்டுள்ளது.

