இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்துள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு இன்று மதியம் வெளியிட்ட நிலைவர அறிக்கையின் பிரகாரம், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 3 ஆயிரத்து 285 ஆக காணப்படுகின்றது.
3 லட்சத்து 98 ஆயிரத்து 801 பேர் இதுவரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என நேற்றிரவு தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
எனினும், கடந்த நான்கு நாட்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் தாமதமாக வெளிவந்த முடிவுகள் இன்று இணைக்கப்பட்டுள்ளன. இதன்பிரகாரம் புதிதாக 4 ஆயிரத்து 484 தொற்றாளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.










