நாட்டில் 6 மாதங்களுக்குள் 255 பேர் கொலை!

இலங்கையில் கடந்த ஜனவரி முதல் இதுவரையில் 255 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி கொலைச் சம்பவங்களுள் 233 சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவுபெற்றுள்ளன.

அத்துடன், நாட்டில் இதுவரையில் 34 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

குற்றச்செயல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான நடவடிக்கையில் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் புலனாய்வாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

Related Articles

Latest Articles