” பன்றிகளால் நரியை ஒருபோதும் கொல்ல முடியாது. எனவே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தவறான இடத்தில் கை வைத்துள்ளது. அதன் விளைவு தெரியவரும். ரணிலுக்காக எதிரணிகள் ஒன்றுபட வேண்டும்.”
இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர அறைகூவல் விடுத்துள்ளார்.
அறகலய காலத்தில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஹிருணிக்கா அரசியல் போரை முன்னெடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரணிலுடன் தனக்கு அரசியல் ரீதியில் முரண்பாடுகள் இருந்தாலும் தற்போது அவருக்காக முன்னிலையாகின்றேன் எனவும் ஹிருணிக்கா கூறினார்.
” ரணில் விக்கிரமசிங்க உட்பட முன்னாள் ஜனாதிபதிகள் இந்நாட்டுக்கு ஆற்றிய சேவைகளுள் ஒரு சதவீதத்தையேனும் தேசிய மக்கள் சக்தி ஆற்றவில்லை.
இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்கவின் கைதானது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகும். அதற்கு எதிராக நான் குரல் எழுப்புவேன். அதேபோல அரசியல் பேதங்களுக்கு அப்பால் எதிரணிகள் ஒன்றுபட வேண்டும்.” – எனவும் ஹிருணிக்கா குறிப்பிட்டார்.