நாட்டு மக்களுக்காக ஒன்றிணைவோம் – ஜனாதிபதி மீண்டும் அழைப்பு

“ அரசியல் ரீதியில் பிரிந்து நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது, அரசாங்கத்திற்காகவோ எதிர்க்கட்சிக்காகவோ அல்லாது நாட்டு மக்களுக்கு வளமான வாழ்க்கைத் தரத்தை வழங்குவதற்கு அனைத்து தரப்பினரையும் ஒன்றிணையுமாறு மீண்டும் அழைப்பு விடுக்கின்றேன்.”

இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

“ அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தினால் பிரதேசத்தின் விவசாய நடவடிக்கைகளுக்கும் குடிநீர் தேவைக்கும் தீர்வு கிடைக்கும, பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டபோதும் இந்த திட்டத்தினால் விவசாயத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என உறுதியளிக்கின்றேன்.” – எனவும் ஜனாதிபதி கூறினார்.

மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்கில் ஜயிக்கா(JICA) நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்ட அனுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் முதலாம் கட்டம் ,அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , JICA தலைவர் டனகா அகிஹிக்கோ ஆகியோரினால் இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles