” குறைந்தபட்சம் நாட்டை ஒரு வாரத்துக்காவது முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிரமேநாத் தொலவத்த கோரிக்கை விடுத்துள்ளார்.
கம்பஹா வைத்தியசாலையில் வைத்தியராக சேவையாற்றும் தனது சகோதரருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
