ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று (17) இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி இன்னும் சற்று நேரத்தில் இலங்கை அணி துடுப்பெடுத்தாடவுள்ளது.
நடப்பு செம்பியனான இலங்கை அணி 7-வது முறையாக ஆசிய கிண்ணத்தை வெல்லும் எதிர்பார்ப்பில் உள்ளது.










