நானுஓயா நகரில் இன்று ஆட்டோவொன்று விபத்துக்குள்ளானது.
பாடசாலை மாணவர்கள் இருவரை ஏற்றிச்சென்ற ஆட்டோவொன்றே, லொறியொன்றை முந்தி செல்ல முயன்றவேளை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
ஆட்டோ ஓட்டுநரும், இரு மாணவர்களும் விபத்தின்போது ஆட்டோவுக்குள் இருந்தனர். அவர்களுக்கு எந்த விதமான காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வி.தீபன்ராஜ்