நானுஓயாவில் கோவிலில் கொள்ளை: பெண் கைது!

நானுஓயா நகருக்கு அருகாமையில் அமைந்துள்ள ஸ்ரீ மருத வீரன் ஆலயத்தில் கொள்ளையடித்த பெண் , பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.

சாமி சிலைகள், விளக்குகள் மற்றும் கோவில் உண்டியலை உடைத்து உண்டியலில் இருந்த பணம் என்பவற்றை களவாடி இவர் தப்பிச்செல்ல முற்பட்டுள்ளார்.

மக்களால் பிடிக்கப்பட்ட அவர், நானுஒயா பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பொது மக்களிடம் மாட்டிக் கொண்ட பிறகு மனநலம் பாதிக்கப்பட்ட நபர் போல் நடிந்து மயங்கி விழுவதுபோல இவர் நடித்துள்ளார் என தோட்ட பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலதிக விசாரணைகளை நானுஒயா பொலிஸ் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles