நானுஓயா, டெஸ்போட் கீழ் பிரிவு ஸ்ரீ கருமாரி அம்மன் ஆலயம் உடைக்கப்பட்டு, அம்மனின் தங்க நகைகள் மற்றும் உண்டியலில் இருந்த பணம் என்பன களவாடப்பட்டுள்ளன என்று ஆலய நிர்வாகத்தினால் நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்றிரவே இக்கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆலயம் இதற்கு முன்னரும் உடைக்கப்பட்டு, தங்க நகைகள் மற்றும் உண்டியல் பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் முறைப்பாடு செய்தும், பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என நிர்வாக சபை குற்றஞ்சாட்டியுள்ளது.
டி. சந்ரு