நானுஓயா பகுதியில் நாயொன்றுமீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட கொடூர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
நானுஒயா எடின்பரோ தோட்டப் பகுதியில் வளர்ப்பு நாயொன்றை, சிறுவரொருவர் சரமாரியாக தாக்கி, பின்னர் ஆற்றில் தூக்கி எறியும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக இருந்தது.
இது தொடர்பில் சமூகவலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
வளர்ப்பு நாயின் உரிமையாளரால் இது தொடர்பில் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் குறித்த சிறுவன் நானுஓயா பொலிஸாரால் இன்று விசாரிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த நாய்க்குரிய மருத்துவ ஏற்பாடுகளை செய்வதற்கு சிறுவனின் வீட்டார் சமம்மதித்துள்ளனர். பின்னர் எச்சரிக்கப்பட்டு சிறுவன் விடுவிக்கப்பட்டுள்ளார் எனவும் எமது செய்தியாளர் கூறினார்.
கௌசல்யா










