நானுஓயாவில் விபத்து: இருவர் படுகாயம்!

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் பிளக்பூல் சந்தி பகுதியில் இன்று வியாழக்கிழமை (27) காலை 6 மணியளவில் ஜீப் ரக வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு சுமார் 25 அடி பள்ளத்தில் பாய்ந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கினிகத்தேன பகுதியில் இருந்து பதுளை பகுதியை நோக்கி பயணித்த ஜீப் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, குறித்த வண்டியில் பயணித்த மூவரில் இருவர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என தெரிவித்துள்ள நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles