தொடர் மழையால் இன்று காலை நுவரெலியா – தலவாக்கலை பகுதியில் 105 ஆவது கிலோமீட்டர் தூரத்தில் கிலாரண்டன் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் நுவரெலியா, தலவாக்கலை மற்றும் மெராயா ஊடாக டயகமைக்கான போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது. எனவே, மாற்று வீதியாக நானுஓயா- ரதல்ல குறுக்கு வீதி பயன்படுத்தப்பட்டுவருகின்றது.
டி.சந்ரு திவாகரன்
