நானுஓயா லேங்டல் தோட்டத் தொழிலாளர்களின் பணி நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது!

நானுஓயா – சமர்செட் , லேங்டல் தோட்ட தொழிலாளர்களின் பணி
நிறுத்தப் போராட்டம், பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டை தொடர்ந்து முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த வாரம் லேங்டல் தோட்டத்தை சேர்ந்த 33 வயது உடைய கிருஷ்ணகுமார் என்ற தொழிலாளி வேலை விட்டு வீதியைக் கடந்து செல்லும் போது பாரவூர்தி மோதியதில் உயிரிழந்தார்.

வேலை நேரத்தில் ஏற்பட்ட இந்த உயிரிழப்பைத் தொடர்ந்து உயிரிழந்த தொழிலாளிக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரி கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட தோட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பணி நிறுத்த போராட்டம் ஒன்றில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தப் போராட்டம் தொடர்பில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் திகாம்பரத்தின் பணிப்புரைக்கு இணங்க தொழிலாளர் தேசிய சங்கத்தின் நுவரெலியா மாநில இயக்குநர் சந்திரன் தலைமையிலான குழுவினர் இன்று தோட்ட நிர்வாகத்துடன் பேச்சு ஒன்றை நடத்தினர்.

இதன் போது ஏற்பட்ட இணக்கப்பாட்டை தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் நாளை முதல் வேலைக்கு திரும்புவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இந்த பேச்சு வார்த்தையில் சமர்ப்பசெட் தோட்ட குறூப் முகாமையாளர் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மாநில பிரதிநிதி ஐயன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் நுவரெலியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் நிரோஷன் உட்பட தோட்ட தலைவர்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles