” நான் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணையவில்லை. எனது பெயரை தவறாக பயன்படுத்திவருகின்றனர்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார்.
அநுரபிரியதர்சன யாப்பா, சந்திம வீரக்கொடி, சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே உட்பட சுயாதீன அணியில் உள்ள 6 எம்.பிக்கள் சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டது. இதில் நால்வர் இன்று தமது நிலைப்பாட்டை அறிவித்தனர்.
எனினும், தான் சஜித் அணியில் இணையவில்லை என ஜோன் செனவிரத்ன அறிவித்துள்ளார்.
