” எனக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி தேவையில்லை. உண்மையான எதிர்க்கட்சிக்குரிய பணியை எமது கட்சியே முன்னெடுக்கின்றது.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டு மக்களுக்காக முன்னிலையாவதற்கு பதவி, பட்டம் தேவையில்லை. எதிர்க்கட்சி தலைவர் பதவி இல்லாத காலப்பகுதியில்கூட கூட்டு எதிரணியை உருவாக்கி எமது கட்சியே எதிரணிக்குரிய பணியை முன்னெடுத்தது.
எனக்கு எதிர்க்கட்சி பதவி இல்லாவிட்டாலும், உண்மையான எதிர்க்கட்சிக்குரிய பணியை இப்போதும் நாமே முன்னெடுக்கின்றோம்.
அத்துடன், தனிப்பட்ட கட்சிகளின் உள்ளக பிரச்சினை எமக்கு முக்கியம் இல்லை. எதிரணிகள் பலமடைய வேண்டும். மக்களுக்காக அணிதிரள வேண்டும். அதற்காக அரசியல் தலைமைத்துவம் வழங்க நாம் தயார்.” – என்றார்.