நாம் குழந்தைகள் முன்பு தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

குழந்தைகள் முன்பு கவனாமாக நடந்து கொள்ளுவது அவசியமாகும்.

ஏனெனில் நாம் பேசுவதை பார்த்தும், நாம் நடந்து கொள்வதை பார்த்தும் தான் நமது குழந்தைகளும் அதனை பின்பற்றும்.

அந்தவகையில் குழந்தைகள் முன்பு செய்ய கூடாதா சில செயல்கள் பற்றி இங்கு பார்ப்போம்.

  • வீட்டில் இருக்கும் பெரியவர்களை அன்போடும், மரியாதையுடன் அழைப்பது சிறந்தது.
  • உங்கள் உறவினர்கள் பற்றியோ, அலுவலக சக ஊழியர்கள் பற்றியோ அல்லது அக்கம்பக்கம் இருப்பவர்களின் அறிவுக்குறைவு பற்றியோ, குழந்தைகள் முன் கேலியாகப் பேசிக்கொள்ள கூடாது. ஏனெனில் இதைக் கேட்கும் குழந்தைகளும் சம்பந்தப் பட்டவர்களைப் பார்க்கும்போது உதாசீனம் செய்வார்கள்.
  • திரையில் வரும் நடிகர், நடிகையாக இருந்தாலும் சரி, நம்முடன் நாள்தோறும் தொடர்பிலிருக்கும் சாதாரண மனிதர்களாக இருந்தாலும் சரி, அவர்களைப் பற்றி நமக்குள் பேசிக்கொள்ளும்போதும், `அவர் இவர்’ என்ற வார்த்தையையே பயன்படுத்துவது சிறந்ததாகும்.
  • ஒருவரின் அறிவுக் குறைபாட்டை, தவறான நடவடிக்கையைப் பற்றி, `அவர்கள் இப்படி நடந்துகொண்டால் சரியாக இருக்கும். இப்படிப் பேசினால் சரியாக இருக்கும்’ என்று அக்கறையுடன் விவாதியுங்கள். அதைக் கேட்கும் குழந்தைகளுக்குப் பிறரின் குறைபாட்டைத் திருத்தும், உதவி செய்து அரவணைக்கும் குணம் உண்டாகும்.
  • காய்கறிக்காரன் , கீரைக்காரி, மீனகாரன் என்றும் அவர்களின் தொழில்சார்ந்து பேசுவதை தவர்க்க வேண்டும். ஏனெனில் குழந்தைகளுக்குள்ளும் இந்த எண்ணத்தைக் விதைக்கும். ஆகவே, யாராக இருந்தாலும் நமக்குள் பேசிக்கொள்ளும் போதும் மரியாதையுடன் பேசுவது நல்லது.

Related Articles

Latest Articles